Thursday, 15 January 2015

என்று தணியும் எனது சுதந்திர தாகம்

என்று தணியும் எனது சுதந்திர தாகம் 

1947 இல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்று நமக்கு தெரியும். ஆனால் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். இந்த நாட்டில் மக்களால் சட்டம் இயற்றமுடியுமா ? முடியவே முடியாது. அல்லது இயற்றப்படும் சட்டங்கள் மக்களுக்கு தெரியுமா அல்லது இயற்றப்படும் சட்டங்கள் மக்களுக்கு உன்மையாக பயன் அளிக்கிறதா ? சட்டங்கள் இயற்றப்படும் போது அவை மக்களிடம் அனுமதி பெற்றால்தான் அவை மக்களுக்கான சட்டங்கள். 
மக்களாட்சி என்றால் என்ன ? மக்களை மக்களே ஆள வேண்டும் என்பதுதான் . ஆனால் இந்தியாவில் நடப்பது என்ன ? மக்கள் எதற்கு வோட்டு போடுகிறோம் என்பது தெரியாமலே வோட்டு அளிகின்றனர். 
இயற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் மக்களிடம் அனுமதி பெற வேண்டும் அப்போதுதான் மக்களுக்கு அந்த சட்டங்கள் மக்களுக்கு பயன் உள்ளதா என்பது தெரியும்.
நமது நாட்டில் தொழில்நுட்பம் நன்கு வளர்ந்து உள்ளதாக  கூறுகின்றனர் அப்படி என்றால் அனைத்து சட்டங்களையும் தொழில்நுட்ப உதவியுடன் ஏன் மக்களிடம் அனுமதி பெற எடுத்து செல்ல கூடாது. 
மக்களுக்கு உண்மையான சுதந்திரம் வேண்டும் என்றால் முதலில் மக்களுக்கான சட்டங்கள் மக்களால் மக்களே இயற்றவேண்டும் அப்போதுதான் உண்மையான சுதந்திரம் மக்களுக்கு கிடைக்கும்.

ஏன் அரசியல் வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் மக்களின் கையில் ஆட்சியை எப்போதும் கொடுக்க விரும்புவது இல்லை. ஏன் எனில் அரசியல் வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் மக்களை சுரண்ட முடியாது அல்லவா ? 
ஆக இதற்க்கு தீர்வு என்ன ? அரசியல் வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் மக்களின் பணியாளர்கள் என்பதை உணர வேண்டும். 
நமது பிரதமர் மோடி தான் முதல் முதலில் தன்னை இந்த நாட்டின் பணியாளர் மக்களின் பணியாளர் என்று அறிவித்து கொண்டார். இவரை போல ஒவ்வொரு அரசியல் வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தங்களை மக்களின் பணியாளர் என்று உணர்ந்தால் நாடு முன்னேறும். 
என்று தணியும் எனது சுதந்திர தாகம் .......?

No comments:

Post a Comment